Watch us LIVE Every Sunday at 11 AM on www.gracegenerationchurch.org/live

ஸ்தோத்திரம் இயேசுநாதா உமக்கென்றும்

sthoththiram Yesunaathaa umakkentum

ஸ்தோத்திரம் இயேசுநாதா

sthoththiram Yesunaathaa

ஸ்தோத்திரம் செய்கின்றோம் நின்னடியார்

sthoththiram seykintom ninnatiyaar

திருநாமத்தின் ஆதரவில்

thirunaamaththin aatharavil


வான தூதர் சேனைகள் மனோகர

vaana thoothar senaikal manokara

கீதங்களால் எப்போதும்

geethangalaal eppothum

ஒய்வின்றிப் பாடி துதிக்க மாபெரும்

oyvintip paati thuthikka maaperum

மன்னவனே உமக்கு

mannavanae umakku


நின் உதிரமதினால் திறந்த

nin uthiramathinaal thirantha

நின்ஜீவ புது வழியாம்

ninjeeva puthu valiyaam

நின் அடியார்க்கும் பிதாவின் சந்நிதி

nin atiyaarkkum pithaavin sannithi

சேரவுமே சந்ததம்

seravumae santhatham


இத்தனை மகத்துவமுள்ள பதவி

iththanai makaththuvamulla pathavi

இப்புழுக்களாம் எங்களுக்கு

ippulukkalaam engalukku

எத்தனை மாதயவு நின்கிருபை

eththanai maathayavu ninkirupai

எத்தனை ஆச்சரியம்

eththanai aachchariyam


இன்றைத் தினமதிலும் ஒருமித்து

intaith thinamathilum orumiththu

கூட உம் நாமத்தினால்

kooda um naamaththinaal

தந்த நின் கிருபைக்காக உமக்கென்றும்

thantha nin kirupaikkaaka umakkentum

ஸ்தோத்திரம் ஸ்தோத்திரமே

sthoththiram sthoththiramae


நீரல்லால் எங்களுக்கு பரலோகில்

neerallaal engalukku paralokil

யாருண்டு ஜீவநாதா

yaarunndu jeevanaathaa

நீரேயன்றி இகத்தில் வேறோரு

neeraeyanti ikaththil vaeroru

தேற்றமில்லைப் பரனே

thaettamillaip paranae